Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 நீயா நானா போட்டியில் மும்பை - ராஜஸ்தான் 2 அணிகளிலுமே தலா 2 மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

mumbai indians win toss opt to field against rajasthan royals in must win match in ipl 2021
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 5, 2021, 7:26 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு 4வது அணியாக முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் இன்று மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஷார்ஜா பிட்ச் ஸ்லோவாக இருப்பதால் மிதவேகப்பந்துவீச்சாளர் ஒருவர் தேவை என்பதால் ஜிம்மி நீஷமை சேர்த்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு வெளிநாட்டு வீரரை நீக்கவேண்டிய கட்டாயத்தில் குயிண்டன் டி காக்கை நீக்கியுள்ளது.

டி காக் நீக்கப்பட்டதால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அணியில் இணைந்துள்ளார். இஷான் சேர்க்கப்பட்டதால் க்ருணல் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ஜிம்மி நீஷம், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மயன்க் மார்கண்டேவிற்கு பதிலாக மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபாலும், ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, க்ளென் ஃபிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios