Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 இஷான் கிஷன் அதிரடி அரைசதம்..! 9வது ஓவரிலேயே இலக்கை அடித்து மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 91 ரன்கள் என்ற எளிய இலக்கை 8.2 ஓவரில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
 

mumbai indians beat rajasthan royals and sustain an opportunity to qualify for ipl 2021 play off
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 5, 2021, 10:40 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு 4வது அணியாக தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால்(12), லூயிஸ்(24) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர், மற்ற வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

ஷார்ஜாவின் ஸ்லோவான பிட்ச்சில் தெளிவாக சாமர்த்தியமாக ஆடுவதை விடுத்து, அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடமுயன்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாம்சன்(3), துபே(3), ஃபிலிப்ஸ்(4), மில்லர்(15), டெவாட்டியா(12) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவரில் வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி.

91 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃபிற்கு முன்னேற கேகேஆருடன் போட்டி போடும் நிலையில், மோசமான நெட்ரன்ரேட்டை பெற்றிருந்த மும்பை அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது.

ரோஹித் சர்மா 22 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த இஷான் கிஷன், அதிரடியாக ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து, 9வது ஓவரின் 2வது பந்தில் சிக்ஸர் விளாசி மும்பை அணியை வெற்றி பெற செய்தார். அந்த சிக்ஸருடன் அவரது அரைசதமும் பூர்த்தியானது.

இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios