IPL 2023: எலிமினேட்டரில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் நாளை சென்னையில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. இன்று சென்னையில் நடந்துவரும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 172 ரன்களை குவிக்க, குஜராத் அணி 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும்.
நாளை சென்னையில் நடக்கும் எலிமினேட்டரில் மும்பை - லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் தோற்கும் அணி தொடரைவிட்டு வெளியேறும். ஜெயிக்கும் அணி, முதல் தகுதிப்போட்டியில் தோற்ற அணியுடன் 2வது தகுதிப்போட்டியில் ஆடும்.
எனவே சென்னையில் நாளை நடக்கும் எலிமினேட்டரில் மும்பை - லக்னோ 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா/விஷ்ணு வினோத், நெஹல் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ரித்திக் ஷோகீன்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கைல் மேயர்ஸ், குயிண்டன் டி காக், பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், மோசின் கான், யஷ் தாகூர்.