விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கோலோச்சுவதற்கான காரணம் என்னவென்று பாக்., முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். 

சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனகளையும் குவித்து, 3 விதமான போட்டிகளிலும் அபாரமான பேட்ஸ்மேனாக வலம்வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் விராட் கோலி, இதுவரை 70 சதங்களை விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி அவரது கெரியர் முடிவதற்குள் தகர்த்துவிடுவார் என்று எதிரபார்க்கப்படுகிறது. 

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக கோலோச்சிவருகிறார் விராட் கோலி. இந்நிலையில், விராட் கோலி குறித்தும் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்வது குறித்தும் பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான முகமது யூசுஃப், விராட் கோலி பயிற்சி செய்வதை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவரது பயிற்சி வீடியோக்களை பார்த்திருக்கிறேன். யாராவது என்னிடம் மாடர்ன் கிரிக்கெட் பற்றி கேட்டால், நான் வியந்து சொல்வது, இப்போதைய வீரர்களின் டிரெய்னிங் தான். மிகவும் ஃபிட்டாகவும், வேகமாகவும் இருக்கிறார்கள். அதுதான் கோலியின் டெரிஃபிக்கான ஆட்டத்திற்கும் காரணம்.

கோலி 70 சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 12000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கி கொண்டிருக்கிறார். மிகச்சிறந்த எண்களை பெற்றிருக்கிறார். 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடுகிறார். சமகாலத்தின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார்.