உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்கால் அணியின் கேப்டனாக அனுஸ்துப் மஜும்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கேப்டனாக இருந்த அபிமன்யூ ஈஸ்வரனிடமிருந்து கேப்டன்சி பொறுப்பு மஜும்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனோஜ் திவாரி, இஷான் போரெல் ஆகியோரும் பெங்கால் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியின் தம்பியும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டருமான முகமது கைஃப் பெங்கால் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பெங்கால் அணி:

அனுஸ்துப் மஜும்தர்(கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி(துணை கேப்டன்), அபிமன்யூ ஈஸ்வரன், மனோஜ் திவாரி, சுதி சட்டர்ஜி, இஷான் போரெல், ரித்விக் ராய் சௌத்ரி, விவேக் சிங், ஷபாஸ் அகமது, அர்னாப் நந்தி, முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அபிஷேக் தாஸ், முகமது கைஃப், ஆரித்ரா சட்டர்ஜி, சுவாங்கர் பால், ரிட்டிக் சட்டர்ஜி, பிரயாஸ் ராய் பர்மான், கைஃப் அகமது, ரவி காந்த் சிங்.