பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வயதை ஏய்த்து போடுவார்கள் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்ததே. ஷாகித் அஃப்ரிடி தொடங்கி பல வீரர்கள் வயதை பொய்யாக சொல்லித்தான் நீண்டகாலம் ஆடினர்.  

அந்தவகையில் இப்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோரது அதிகாரப்பூர்வ வயது 19, 20 என்று மிகக்குறைவாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களை பார்த்தால் அப்படி தெரியாது; வயது அதிகமாகத்தான் தெரியும்.

அந்தவகையில், அது ஊர்ஜீதப்படுத்தியுள்ளார் பாக்., அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட்டில் 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2வது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சரில் தொடங்குகிறது.

இந்நிலையில், தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் குறித்து பேசியுள்ள முகமது ஆசிஃப், இப்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் வயது மூத்தவர்கள். 17-18 வயது என்று பேப்பரில் இருக்கும். ஆனால் அவர்களது உண்மையான வயது 27-28ஆக இருக்கும். அவர்களால் 20-25 ஓவர்களை வீச முடியாது. உடலை எப்படி வளைத்து பந்துவீச வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. ஒரு 5-6 ஓவர் ஸ்பெல்லை வீசிவிட்டு ஃபீல்டிங் செய்ய அவர்களால் முடியவில்லை.

மேலும் பேட்ஸ்மேன்களை முன் நகர்ந்து வந்து ஆடவைக்க அவர்களுக்கு தெரியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் கொடுக்காமல் வீசவோ, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு எப்படி வீச வேண்டும் என்றோ தெரியவில்லை என்று மிகக்கடுமையாக விளாசியுள்ளார் ஆசிஃப்.