Asianet News TamilAsianet News Tamil

கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.. தோனியின் பெயரால் அதிர்ந்த மொஹாலி மைதானம்!! ரிஷப் பண்ட்டை வச்சு செஞ்ச ரசிகர்கள்

44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 
 

mohali fans louds dhoni name and teased rishabh pant
Author
Mohali, First Published Mar 11, 2019, 12:23 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் படுமோசமாக சொதப்பியதை அடுத்து, தோனியை வெகுவாக மிஸ் செய்த ரசிகர்கள், தோனியின் பெயரை முழங்கினர். இதையடுத்து மைதானமே தோனியின் பெயரால் அதிர்ந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்திய அணியின் இந்த தோல்விக்கு ரிஷப் பண்ட் முக்கிய காரணம். இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்த ஆஷ்டன் டர்னரை முன்கூட்டியே வீழ்த்த கிடைத்த வாய்ப்பை ரிஷப் பண்ட் தவறவிட்டார். 

mohali fans louds dhoni name and teased rishabh pant

உலக கோப்பைக்கு ரிசர்வ் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை அழைத்து செல்ல அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்ததால் அவருக்கு கடைசி 2 போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நான்காவது போட்டியில் ஆடிய ரிஷப் பண்ட் படுமோசமாக சொதப்பினார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மிகவும் மோசம். பேட்ஸ்மேன் அடிக்கத் தவறும் பந்துகளை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார். 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பிற்கு ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். 44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

mohali fans louds dhoni name and teased rishabh pant

அந்த ஸ்டம்பிங்கை ரிஷப் பண்ட் தவறவிட்டதை அடுத்து, தோனியை மிஸ் செய்வதாக உணர்ந்த ரசிகர்கள், தோனி... தோனி... என முழங்கினர். சில நிமிடங்கள் அவ்வாறு முழங்கியதால் மொஹாலி மைதானமே தோனியின் பெயரால் மைதானமே அதிர்ந்தது. 

அனுபவ விக்கெட் கீப்பர் தோனி விக்கெட் கீப்பிங்கில் தவறே இழைக்கமாட்டார். அதுமட்டுமல்லாமல் அசாதாரண கேட்சுகள், அசாத்தியமான ஸ்டம்பிங்குகள், பவுலர்களுக்கு அருமையான ஆலோசனைகள் என அசத்திவிடுவார். தோனி அணியில் இருப்பதே அணிக்கு மிகப்பெரிய பலம். ரிஷப் பண்ட்டை லெஜண்ட் வீரரான தோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆனால் இந்த கண்டிஷனை ரசிகர்களுக்கு எல்லாம் போடமுடியாது. அந்த குறிப்பிட்ட சூழலில் தோனியை மிஸ் செய்த ரசிகர்கள், தோனியின் பெயரை முழங்கினர். இதையடுத்து ரிஷப் பண்ட்டின் முகம் சுருங்கியது. அதன்பின்னர் சற்று தன்னம்பிக்கையை இழந்த ரிஷப், மேலும் மேலும் தவறிழைத்தார். 

சமூக வலைதளங்களிலும் ரிஷப் பண்ட்டை ரசிகர்கள் படுபயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios