இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது. வரும் 14ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 3ம் தேதியே(நேற்று) இங்கிலாந்து அணி இலங்கைக்கு சென்றுவிட்டது.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின் படி, குவாரண்டினில் இருப்பதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து அணி இலங்கைக்கு சென்றுவிட்டது. இலங்கை சென்றதும் இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஸ்பின்னர் மொயின் அலிக்கு கொரோனா பாசிட்டிவ்.

எனவே மொயின் அலி 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் அவர் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார். 2வது டெஸ்ட்டில் தான் ஆடுவார். துணைக்கண்ட(இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானவை என்ற நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்டார் ஸ்பின்னர் மொயின் அலி இலங்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இந்நிலையில், அவர் முதல் டெஸ்ட்டில் ஆடாதது இங்கிலாந்து அணிக்கு சற்றே பின்னடைவுதான்.