Asianet News TamilAsianet News Tamil

திடீரென ஓய்வு அறிவித்த மொயின் அலி..! ரசிகர்கள் அதிர்ச்சி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.
 

moeen ali retires from international test cricket
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 27, 2021, 2:46 PM IST

இங்கிலாந்து அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலி 2014ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலுமே அபாரமாக ஆடி இங்கிலாந்து அணிக்காக பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே அசத்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துவருகிறார்.

இங்கிலாந்து அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ஆடிவந்த மொயின் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மொயின் அலி, 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 2,914 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் நடக்கவுள்ள நிலையில், மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

3 விதமான போட்டிகள், ஐபிஎல் உள்ளிட்ட லீக் தொடர்கள் என தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவதால் குடும்பத்துடன் இருக்க முடியாமல் போனதாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடவிரும்புவதால் அதில் கவனம் செலுத்தும் ஏதுவாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் மொயின் அலி.

மொயின் அலி தற்போது ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆடிவருகிறார். மொயின் அலி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios