Asianet News TamilAsianet News Tamil

#INDvsNZ டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அந்த அணி தான் வெல்லும்..! உறுதியாக அடித்து சொல்லும் இங்கி., முன்னாள் கேப்டன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.
 

michael vaughan opines new zealand will win icc world test championship final
Author
England, First Published May 21, 2021, 9:04 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், நியூசிலாந்து அணி தான் கண்டிப்பாக ஜெயிக்கும். இங்கிலாந்து கண்டிஷன், டியூக் பந்து ஆகிய இரண்டுமே நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்லாது, இந்திய அணி ஒருவாரத்திற்கு முன்புதான் இங்கிலாந்து வரவுள்ளனர். ஆனால் நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளனர். அது அவர்களுக்கு பயிற்சியாக அமையும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஆடிவரும் வீரர்களை கொண்ட வலுவான அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் டியூக் பந்தில் ஆடிய அனுபவமும் கொண்ட வீரர்களை கொண்ட அணி. எனவே நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெல்வதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios