Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? மைக்கேல் வான் ஆருடம்

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.
 

michael vaughan opines england team has chance to win t20 world cup
Author
England, First Published Jul 19, 2021, 8:06 PM IST

பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று விவரம்:

க்ரூப் 1 - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஏ பிரிவின் வின்னர், பி பிரிவின் ரன்னர்.

க்ரூப் 2 - இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தா, பி பிரிவின் வின்னர், ஏ பிரிவின் ரன்னர்.

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளும் தான் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு உள்ளது என்பது குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிலாந்து அணி எந்தவிதத்திலும் குறையே இல்லாத பூர்த்தியான, முழுமையான அணியாக உள்ளது என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

2015 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணியை, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடக்கூடிய ஒரு வலுவான அணியாக கட்டமைத்தார் கேப்டன் ஒயின் மோர்கன். அதன் விளைவாக, 2019 உலக கோப்பையை ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது. டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக இங்கிலாந்து அணி ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பையில் முழுமையான அணியாக களமிறங்குவதால், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக மைக்கேல் வான் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios