Asianet News TamilAsianet News Tamil

BBL 2021:மேக்ஸ்வெல், ரசல் அடிக்காமலேயே 207 ரன்களை குவித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ்! பிரிஸ்பேனை வீழ்த்தி அபார வெற்றி

பிரிஸ்பேன் ஹீட் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

melbourne stars beat brisbane heat by 20 runs in bbl
Author
Brisbane QLD, First Published Dec 27, 2021, 10:04 PM IST

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான க்ளென் மேக்ஸ்வெல் 2 ரன் மட்டுமே அடித்தார். தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு அதிரடி மன்னனும் ஃபினிஷருமான ஆண்ட்ரே ரசலும் டக் அவுட்டானார்.

மெல்போர்ன் அணியின் 3 முக்கியமான வீரர்களும் சேர்ந்தே மொத்தமாக 2 ரன் மட்டுமே அடித்தனர். ஆனால் காட்டடி அடித்த தொடக்க வீரர் ஜோ கிளார்க் 44 பந்தில் 85 ரன்களும், மிடில் ஆர்டர் வீரர் கார்ட்ரைட் 44 பந்தில் 79 ரன்களும் குவித்தனர். ஜோ கிளார்க் மற்றும் கார்ட்ரைட் ஆகிய இருவரின் காட்டடியால் 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி.

208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 34 பந்தில் 57 ரன்கள் அடித்தார். பென் டக்கெட்டும் அதிரடியாக ஆடி 35 பந்தில் 54 ரன்கள் அடித்தார். ஆனால் இவர்கள் இருவரைத்தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் 187 ரன்கள் அடித்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆட்டநாயகனாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios