ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்தில் அந்த அணியில் ஆடிய நட்சத்திர வீரர் மெக்ராத். பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக இருந்த கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தால் மிரட்டி தெறிக்கவிட்ட ஃபாஸ்ட் பவுலர்களில் மெக்ராத்தும் ஒருவர்.

வாசிம் அக்ரம், ஆம்ப்ரூஸ், ஷான் போலாக், மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகியோர் தங்களது வேகத்தில் எதிரணிகளின் பேட்டிங் ஆர்டர்களை தெறிக்கவிட்டவர்கள். ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான மெக்ராத், ஆஸ்திரேலிய அணிக்காக, 124 டெஸ்ட் போட்டிகளிலும் 250 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 949 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்து நான்காமிடத்தில் இருப்பவர் மெக்ராத். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட் வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர்.

ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் முதன்மையானவராக திகழும் மெக்ராத், சமகால கிரிக்கெட்டில் முழுமையான ஃபாஸ்ட் பவுலர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் என்று பதிலளித்த மெக்ராத், அவர் பவுலிங் போடும் விதம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் முழுமையான ஃபாஸ்ட் பவுலர் எனவும் தெரிவித்தார்.