பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் டார்ஷி ஷார்ட் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு வேடும் ஷார்ட்டும் இணைந்து 145 ரன்களை குவித்தனர். 44 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 52 பந்தில் 72 ரன்கள் அடித்து ஷார்ட்டும் ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர், அவர்களை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஒற்றை இலக்கத்திலும் சொற்ப ரன்களிலும் நடையை கட்டியதால் 20 ஓவரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 188 ரன்கள் அடித்தது.

189 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 25 பந்தில் 43 ரன்கள் அடிக்க, ஜோர்டான் சில்க் 49 பந்தில் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, இவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல் அவுட்டானதால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

அதிரடியாக ஆடி ஹரிகேன்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடித்து வெற்றி பெற உதவிய மேத்யூ வேட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.