Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் சர்மாவின் டி20 ரெக்கார்டை தகர்த்தெறிந்த மார்டின் கப்டில்..! தரமான சம்பவம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி மார்டின் கப்டில் முதலிடம் பிடித்துள்ளார்.
 

martin guptill breaks rohit sharma t20 record
Author
New Zealand, First Published Feb 25, 2021, 4:14 PM IST

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகள் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து அணி, இன்று நடந்த 2வது போட்டியிலும் வெற்றி பெற்றது.

இன்று நடந்த 2வது டி20 போட்டியில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில், 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 219 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 215 ரன்னில் ஆஸ்திரேலியாவை சுருட்டி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

martin guptill breaks rohit sharma t20 record

இந்த போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்த கப்டில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 127 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், இன்று 8 சிக்ஸர்கள் அடித்ததன்மூலம் மொத்தமாக  132 சிக்ஸர்களுடன் முதலிடத்திலிருந்து ரோஹித்தை பின்னுக்குத்தள்ளி கப்டில் முதலிடம் பிடித்தார்.

இந்த பட்டியலில் 117 சிக்ஸர்களுடன் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 3ம் இடத்திலும், 107 சிக்ஸர்களுடன் நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ 4ம் இடத்திலும் உள்ளனர். 105 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் 5ம் இடத்தில் உள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios