Asianet News TamilAsianet News Tamil

கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்..? மற்றொரு சிறந்த வீரரின் அதிரடி தேர்வு

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக பதிலளித்துள்ளார். 
 

marnus labuschagne picks better test batsman between virat kohli and steve smith
Author
Australia, First Published Jul 22, 2020, 3:47 PM IST

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக பதிலளித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

marnus labuschagne picks better test batsman between virat kohli and steve smith

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

கோலி - ஸ்மித் இடையேயான ஒப்பீடு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியா டுடேவிடம் பேசிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனிடமும் அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. கோலி - ஸ்மித் இருவரும் யார் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

marnus labuschagne picks better test batsman between virat kohli and steve smith

அதற்கு பதிலளித்த மார்னஸ் லபுஷேன், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்டீவ் ஸ்மித் தான். எல்லா கண்டிஷன்களிலும் சிறப்பாக ஆடக்கூடிய வீரர். அதுதான் அவருக்கு உலகின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது இந்தியா, இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக ரன்களை குவித்துவருகிறார். விராட் கோலியும் அப்படித்தான்.. அனைத்து கண்டிஷன்களிலும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் ஸ்மித் தான் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். 

ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84 ஆகும். விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்களுடன் 7240 ரன்கள் அடித்துள்ளார். ஸ்மித்தை விட 13 டெஸ்ட் போட்டிகள் அதிகமாக ஆடியுள்ள கோலி, அவரைவிட வெறும் 13 ரன்கள் மட்டுமே கூடுதலாக அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 53.63 தான். அவரைவிட சுமார் 9 ரன்கள் அதிக சராசரியை வைத்துள்ளார் ஸ்மித்.

கோலி 2018ல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமாதிரி சில சமயங்களில், ஒட்டுமொத்த தொடரிலும் கோலி சொதப்பியிருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுதும் எந்த நாட்டில் ஆடினாலும், ஸ்மித் அருமையாக பேட்டிங் ஆடி அசத்துகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், வெறும் 7 இன்னிங்ஸ்களில் 110 என்ற சராசரியுடன் மொத்தம் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios