Asianet News TamilAsianet News Tamil

டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்..! ஆஸி., லெஜண்ட் மார்க் வாக் அதிரடி தேர்வு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சமகாலத்தின் டாப் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் மார்க் வாக்.
 

mark waugh picks top 5 players of t20 cricket
Author
First Published Sep 27, 2022, 8:53 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சமகாலத்தின் டாப் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் மார்க்  வாக். 

இதையும் படிங்க - டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்

ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாஹீன் அஃப்ரிடி, ரஷீத் கான், ஜோஸ் பட்லர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய 5 வீரர்களையும் டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்களாக தேர்வு செய்துள்ளார் மார்க் வாக்.

இதுகுறித்து பேசிய மார்க் வாக், பும்ரா அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் மிகச்சிறந்த பவுலர். டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் வீழ்த்தும் திறன் தான் முக்கியமானது. டெத் ஓவர்களை அருமையாக வீசும் பும்ரா, தொடக்கத்திலும் சிறப்பாக வீசவல்லவர்.

பவுலிங்கை மற்றொரு பவுலரை தொடங்கவேண்டுமென்றால், அது ஷாஹீன் அஃப்ரிடி தான். மிகச்சிறந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் அவர். விக்கெட்டுகளை வீழ்த்து குவிக்க வல்லவர். மற்ற வீரர்கள் பின்பற்றும் அளவிற்கான முக்கியமான வீரர். பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கிய வீரர். நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர் மட்டுமல்லாது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஷாஹீன் அஃப்ரிடி.

டி20 கிரிக்கெட்டில் கண்டிப்பாக 4 ஓவர்கள் முழு கோட்டாவை வீசக்கூடிய பவுலர் ரஷீத் கான். அந்த 4 ஓவர்களில் 20 ரன்கள் லெவலில் விட்டுக்கொடுத்து 3-4 விக்கெட்டுகளை வீழ்த்த வல்லவர் ரஷீத். பேட்டிங்கும் ஆட வல்லவர்.

அடுத்ததாக நான் 4வதாக தேர்வு செய்யும் வீரர் ஜோஸ் பட்லர். டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் பட்லர் தான். மிக நேர்த்தியாக அடித்து ஆடக்கூடிய வீரர் பட்லர். எல்லா தொடர்களிலும் அவர் ஆடுவதை பார்த்திருக்கிறோம். மற்ற வீரர்களிடமிருந்து வேற லெவல் வித்தியாசமான வீரர் பட்லர்.

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

5வது வீரர் க்ளென் மேக்ஸ்வெல். போட்டிகளை ஜெயித்து கொடுக்கக்கூடிய மேட்ச் வின்னர் மேக்ஸ்வெல். பேட்டிங், ஃபீல்டிங் இரண்டிலும் பட்டைய கிளப்பிவிடுவார். அவரது பவுலிங் குறைத்து மதிப்பிடப்படுகிறது. 30 பந்துகள் பேட்டிங்  ஆடினால் மேக்ஸ்வெல் ஆட்டத்தை ஜெயித்து கொடுத்துவிடுவார். சீரான நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர் கிடையாது. ஆனால் மேக்ஸ்வெல் மேட்ச் வின்னர் என்று மார்க் வாக் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios