உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது வங்கதேச அணி. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் வங்கதேச அணியில் சீனியர் வீரர் மஹ்மதுல்லா ஆடவில்லை. 

அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாததால் இந்த முக்கியமான போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சபீர் ரஹ்மான் களமிறக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டரில் மிடில் ஆர்டரில் வலு சேர்ப்பவர் மஹ்மதுல்லா. டெத் ஓவர்களில் அடித்து ஆடும் திறன் கொண்டவர் மஹ்மதுல்லா. அவர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்புதான். 

இந்திய அணியும் இந்த போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கேதர் ஜாதவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் குல்தீப் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மொசாடெக் ஹுசைன், சபீர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், மஷ்ரஃபே மோர்டசா(கேப்டன்), ருபெல் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாஹல், ஷமி, பும்ரா.