லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் தான் இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தில் உள்ளன.
புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கான போட்டியில் இன்று இந்த 2 அணிகளும் மோதுகின்றன. இந்த சீசனின் தொடக்கத்தில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இன்று புனேவில் நடக்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இரு அணிகளின் காம்பினேஷனிலுமே எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், பிரதீப் சங்வான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.
