இலங்கை அணியின் டி20 கேப்டனும் ஃபாஸ்ட் பவுலருமான மலிங்காவிற்கு 36 வயது ஆகிறது. 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் பவுலர்கள் ஆடுவது அரிதினும் அரிது. அதிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவது சாத்தியமே இல்லாத விஷயமாகிவிட்டது. 

அப்படியான சூழலில் 36 வயதிலும் இலங்கை அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார் மலிங்கா. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட மலிங்கா, அவரது கெரியரின் தொடக்கத்தி அதிவேகமாக வீசி பேட்ஸ்மேன்களை மிரட்டுவார். துல்லியமான யார்க்கர்களை வீசக்கூடியவர். வயது ஆக ஆக, வேகத்தை மட்டும் குறைத்துக்கொண்டாரே தவிர, துல்லியம் கொஞ்சம் கூட மிஸ்ஸாவதில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது. 197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி 171 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 14 பந்தில் 35 ரன்களை விளாசிய ஆண்ட்ரே ரசலை மலிங்கா தனது துல்லியமான யார்க்கரின் மூலம் வெளியேற்றினார். அந்த வீடியோ இதோ.. 

காலங்காலமாக பந்துவீசி வரும் மலிங்கா, கொஞ்சம் கூட துல்லியம் மாறாமல் இன்னும் தனது யார்க்கர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார். 

Also Read - ஐபிஎல் 2020: சிஎஸ்கேவின் பெஸ்ட் டீம் காம்பினேஷன்