Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானை தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்த குல்தீப்!! செம ஷாக்கான ரசிகர்கள்

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

kuldeep yadav picks england and pakistan are toughest teams to be faced in world cup
Author
India, First Published Mar 20, 2019, 4:02 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் நெருக்கடி கொடுக்கும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும். அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

kuldeep yadav picks england and pakistan are toughest teams to be faced in world cup

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. எனவே அந்த அணியும் சவாலான அணிதான். 

kuldeep yadav picks england and pakistan are toughest teams to be faced in world cup

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது இந்நாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் உலக கோப்பை குறித்து பேசிய குல்தீப் யாதவ், கண்டிப்பாக இந்திய அணி உலக கோப்பையுடன் தான் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பும். இந்திய அணியை தவிர்த்து இங்கிலாந்து அணி அதிரடியான மற்றும் சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியும் வலுவாக உள்ளது. அந்த அணி உலக கோப்பையில் நன்றாக ஆடும் என நினைக்கிறேன். இந்திய அணியை தவிர்த்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும்தான் உலக கோப்பையில் வலுவான அணிகள் என்று குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 

kuldeep yadav picks england and pakistan are toughest teams to be faced in world cup

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை விடுத்து பாகிஸ்தான் அணியை வலுவான அணியாக பார்க்கிறார் குல்தீப். பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை விட பாகிஸ்தான் அணி சவாலான அணியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios