வங்கதேச கிரிக்கெட் வாரியமும் வங்கதேச பிரீமியர் லீக்கை நடத்திவருகிறது. கடந்த 11ம் தேதி இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்கியது. முதல் போட்டியில் சாட்டக்ரோம் சேலஞ்சர்ஸ் மற்றும் சில்ஹெட் தண்டர் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தண்டர் அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது. 19 ஓவரில் 163 ரன்கள் என்ற இலக்கை எட்டி சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

தண்டர் அணியில் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் கிரிஷ்மர் சண்டோகி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் ஆடியபோது, கிரிஷ்மர் சண்டோகி க்ரீஸிலிருந்து மிக தூரமாக காலை வைத்து நோ பால் வீசினார். அதற்கு முந்தைய பந்தை மிகப்பெரிய அகலப்பந்தாகவும் வீசினார். பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல் வீசப்பட்டது அந்த அகலப்பந்து. ஆனால் விக்கெட் கீப்பர் அபாரமாக டைவ் அடித்து அந்த பந்தை பிடித்துவிட்டார். அந்த வீடியோ இதோ..

இது எதார்த்தமாக வீசப்பட்ட நோ பால் மற்றும் வைடாக தெரியவில்லை. எனவே கிரிஷ்மர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கிரிஷ்மரிடம் விசாரணை நடத்தவுள்ளது.