ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று கேகேஆர் சாதனை!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதல் முறையாக முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

Kolkata Knight Riders create record first time in IPL history by winning first 3 matches rsk

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நடப்பு ஆண்டுக்கான 17ஆவது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டி உள்பட இதுவரையில் 16 லீக் போட்டிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் 12 போட்டிகளில் ஹோம் அணியும், 4 போட்டிகளில் அவே அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 16ஆவது லிக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

விசாகப்பட்டினம் மைதானத்தில் 16ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. இதில், சுனில் நரைன் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்னும், ஆண்ட்ரே ரஸல் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. இதில் பிரித்வி ஷா 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த வைபவ் அரோரா பந்தில் வருண் சக்கரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ், கேகேஆர் அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் ஸ்டார்க் எடுத்த முதல் விக்கெட் இதுவாகும். இவரைத் தொடர்ந்து அபிஷேக் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் அரோரா பந்தில் நடையை கட்டினார். டேவிட் வார்னர் 18 ரன்களில் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார்.

ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் பண்ட் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவ்வளவு தான் டெல்லி கேபிடல்ஸ் சேப்டர் முடிந்தது. பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹாட்ரிக் வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios