Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 #KKRvsDC டாஸ் ரிப்போர்ட்..! கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள்.. ஸ்டார் பிளேயரை களத்தில் இறக்கிய டெல்லி அணி

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

kkr win toss opt to field against delhi capitals in ipl 2021 uae leg
Author
Sharjah - United Arab Emirates, First Published Sep 28, 2021, 3:21 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. 16 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி அணி கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில் இந்த போட்டியில் வென்றால், பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். ஆனால் கேகேஆர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும்.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்ட்ரே ரசல் காயத்தால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி சேர்க்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சௌதி, ஃபெர்குசன், சந்தீப் வாரியர், சிவி வருண்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரித்வி ஷா காயத்தால் வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், நோர்க்யா, ரபாடா, ஆவேஷ் கான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios