இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ், மிகச்சிறந்த கேப்டனும் கூட. 

1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய கபில் தேவ், 1983ம் ஆண்டு இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

61 வயதான கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கபில் தேவ் விரைந்து குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.