Asianet News TamilAsianet News Tamil

ஆர்ச்சருக்கு அடுத்த காயம்.. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.
 

jofra archer ruled out of test series against new zealand
Author
England, First Published May 17, 2021, 3:51 PM IST

இங்கிலாந்தின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர். காயம் காரணமாக ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய அவர், காயத்திலிருந்து மீண்டு, அடுத்தடுத்த சர்வதேச தொடர்களுக்காக தயாராகிவந்த நிலையில், ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

காயத்திலிருந்து மீண்ட ஆர்ச்சர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சுற்றுப்பயணம், ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் ஆகிய தொடர்களில் ஆடும் முனைப்பில் இருந்தார்.

jofra archer ruled out of test series against new zealand

இங்கிலாந்துக்கு வரும் நியூசிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 2 மற்றும் ஜூன் 10 ஆகிய தேதிகளில்  தொடங்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன.

அந்த தொடருக்கான இங்கிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் சஸெக்ஸ் அணிக்காக ஆடிய ஆர்ச்சர், கெண்ட் அணிக்கு எதிரான போட்டியில் முழங்கையில் காயமடைந்தார். எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios