ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் அறிமுகமானதுமே அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்ததுடன், வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்திக்கொண்ட ஆர்ச்சர், குறுகிய காலத்திலேயே அணியின் நட்சத்திர பவுலர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். 

150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஆர்ச்சர், அருமையாக ஸ்விங்கும் செய்யக்கூடியவர். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் முதல் செசனில் சிறிது நேரம் மழை பெய்து ஆட்டத்தை பாதித்தது. அதன்பின்னர் 2வது செசனிலும் மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது. 41 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்துள்ளது. 

பாபர் அசாம் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். தொடக்க வீரர் ஷான் மசூத் 45 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான அபித் அலி 16 ரன்களிலும் கேப்டன் அசார் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அபித் அலியை ஆர்ச்சர் தனது அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார். மிகச்சிறப்பான அந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் அபித் அலி. அந்த வீடியோ இதோ..