Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செஞ்சா போதும்.. டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திடலாம்..! முன்னாள் வீரர் அட்வைஸ்

டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் அறிவுரை கூறியுள்ளார்.
 

javed miandad advises pakistan team that what to do to beat india in t20 world cup
Author
Pakistan, First Published Oct 14, 2021, 8:38 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன. 

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

இதையும் படிங்க - தோனி மாதிரியான ஆளு அவரு.. ஆர்சிபி கேப்டன்சிக்கு தகுதியான வீரர்! இங்கி., வீரரை பரிந்துரைக்கும் மைக்கேல் வான்

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திராத பாகிஸ்தான், இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாவேத் மியான்தத், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு முமெண்டம் கிடைக்க, இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டி மிக முக்கியம். இந்திய அணி வலுவான அணி, நிறைய டாப் பிளேயர்கள் இருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணி பயமில்லாமல், அழுத்தத்தை பொருட்படுத்தாமல் விளையாடினால் இந்திய அணியை வீழ்த்திவிட முடியும் என்று ஜாவேத் மியான்தத் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios