Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: காயத்தால் களத்திலிருந்து வெளியேறிய பும்ரா.. கலக்கத்தில் இந்திய அணி..! வீடியோ

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பந்துவீசும்போது பும்ராவிற்கு வலது கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் களத்திலிருந்து வெளியேறினார். பும்ராவின் காயம் இந்திய அணிக்கு இந்த போட்டியில் பெரும் பின்னடைவு.
 

jasprit bumrah ankle injury setback for team india
Author
Centurion, First Published Dec 28, 2021, 7:59 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை குவித்தது. இந்திய் அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 123 ரன்களை குவித்தார். அவரது ஓபனிங் பார்ட்னரான மயன்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் இங்கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான எல்கர் ஒரு ரன்னில் முதல் ஓவரிலேயே பும்ராவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மார்க்ரம் (13) மற்றும் கீகன் பீட்டர்சன் (15) ஆகிய இருவரையும் ஷமி வீழ்த்தினார். வாண்டெர் டசனை (3) சிராஜ் வீழ்த்த, 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, 5வது விக்கெட்டுக்கு டெம்பா பவுமாவும் டி காக்கும் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து 72 ரன்கள் சேர்த்தனர். டி காக்கை 34 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷர்துல் தாகூர். அதன்பின்னர் முல்டர் (12) மற்றும் அரைசதம் அடித்த பவுமா (52) ஆகிய இருவரையும் ஷமி வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி 144 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்த இந்திய ஃபாஸ்ட் பவுலர் பும்ரா, இன்னிங்ஸின் 11வது ஓவரை(அவரது 6வது ஓவர்) வீசும்போது, அந்த ஓவரின் 5வது பந்தை வீசிமுடித்துவிட்டு லேண்ட் ஆகும்போது அவரது வலது கால் பிசகியது. இதையடுத்து அவர் வலியால் துடிக்க, ஃபிசியோ களத்திற்கு வந்து பும்ராவை பரிசோதித்தார். பும்ரா வலியால் துடிக்க, அவரை களத்திலிருந்து அழைத்து சென்றனர். பும்ராவிற்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அதன்பின்னர் பும்ரா பந்துவீசவேயில்லை.

இந்திய அணியின் முக்கியமான பவுலரான பும்ரா காயத்தால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு. ஆனாலும் பும்ரா இல்லாமலேயே இந்திய பவுலர்கள் தென்னாப்பிரிக்க அணியை தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர். பும்ராவின் ஃபிட்னெஸ் அப்டேட்டுக்காக இந்திய அணி மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios