Asianet News TamilAsianet News Tamil

கோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ரூட்.. இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்..? அதிரடி வீரரின் அதிரடியான தேர்வு

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் - கேன் வில்லியம்சன் - ஜோ ரூட் ஆகிய நான்கு சிறந்த  பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் யார் என்று இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

jason roy picks joe root as the best batsman in current cricket
Author
England, First Published Jul 13, 2020, 7:12 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்கள் நால்வரும் அபாரமாக ஆடி, அவரவர் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கின்றனர். டி20 போட்டிகளில் ரூட் மட்டும் ஆடுவதில்லை. கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவரும் அதிலும் முத்திரை பதித்துள்ளனர். 

jason roy picks joe root as the best batsman in current cricket

இவர்கள் நால்வரில், டாப் 2 இடங்களில் கோலியும் ஸ்மித்தும் தான் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு தான் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் முத்திரை பதித்த இந்த வீரர்களில் யார் சிறந்தவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மிகவும் கடினமான விஷயம். 

ஆனால் நம்பரின் அடிப்படையிலும் சாதனைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது கோலி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார். அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

jason roy picks joe root as the best batsman in current cricket

போட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். பேட்டிங் திறமையில் நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்றாலும், நம்பரின் அடிப்படையில் கோலி முன் நிற்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்தின் நம்பர் சிறப்பாக உள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் கை ஓங்கியிருக்கிறது. 

இந்நிலையில், கோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ஜோ ரூட் ஆகிய நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனது சக வீரரான ஜோ ரூட்டின் பெயரை ஜேசன் ராயை தெரிவித்தார். 

சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ரூட் தான் ஆகச்சிறந்தவர் என்று ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios