பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 241 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி சாதனை படைத்தது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெஷாவர் ஸால்மி அணி:
சயிம் அயுப், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், டாம் கோலர் காட்மோர், ரோவ்மன் பவல், ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), ஆமீர் ஜமால், வஹாப் ரியாஸ், முஜீபுர் ரஹ்மான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், அர்ஷத் இக்பால்.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:
மார்டின் கப்டில், ஜேசன் ராய், வில் ஸ்மீத், இஃப்டிகார் அகமது, முகமது ஹஃபீஸ், உமர் அக்மல் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ் (கேப்டன்), ட்வைன் பிரிட்டோரியஸ், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஐமல் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயிம் அயுப் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 13.3 ஓவரில் 162 ரன்களை குவித்தனர். 34 பந்தில் 74 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் சயும் அயுப். அதிரடியாக ஆடி சதமடித்த பாபர் அசாம் 65 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 115 ரன்களை குவித்து ரன் அவுட்டானார். ரோவ்மன் பவலும் அவர் பங்கிற்கு 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பெஷாவர் அணி 240 ரன்களை குவித்தது.
241 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை விரட்டிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி பவுண்டரிகளாக விளாசி தெறிக்கவிட்டார். அதிரடியாக ஆடி சதமடித்த ஜேசன் ராய் 63 பந்தில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 145 ரன்களை குவித்து, பாபர் அசாமின் சதத்தை நீர்த்து போகச்செய்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஜேசன் ராய் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். ஜேசன் ராயின் அபாரமான சதத்தால் 241 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை 19வது ஓவரிலேயே (10 பந்துகள் மீதமிருக்க) அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிகபட்ச சேஸிங் ஸ்கோர் இதுதான். டி20 கிரிக்கெட்டில் 3வது அதிகபட்ச சேஸிங் இதுவாகும்.
