இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. 

274 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது. பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், கோலி, ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை 71 ரன்களுக்கே இந்திய அணி இழந்துவிட்டது. கேதர் ஜாதவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயரும் ஜடேஜாவும் இணைந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இன்னும் கூடுதலாக ரன் அடித்திருக்கலாம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கப்டில், சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 79 ரன்களில் தேவையில்லாமல் ஒரு ரன் ஓடி ஷர்துல் தாகூரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

அதேபோல, ஜிம்மி நீஷமும் ரன் அவுட் தான் ஆனார். டெய்லர் சும்மா ஸ்ட்ரோக் வைத்ததற்கு நீஷம் ரன் ஓடினார். ஆனால் பேக்வார்டு பாயிண்ட்டில் ஃபீல்டிங் செய்த ஜடேஜா, வேகமாக ஓடிவந்து பந்தை பிடித்து கரெக்ட்டாக ஸ்டம்ப்பில் அடித்தார். இதையடுத்து நீஷம் ரன் அவுட்டானார். வெறும் 3 ரன்னில் வேஸ்ட்டாக விக்கெட்டை விட்டார் நீஷம். ஜடேஜா செய்த அந்த அருமையான ரன் அவுட் வீடியோ இதோ...