Asianet News TamilAsianet News Tamil

3 வருஷத்துக்கு பிறகு நேரடியாக உலக கோப்பை அணியில் இணையும் ஃபாஸ்ட் பவுலர்..?

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். ஹர்திக் பாண்டியா நான்காவது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக உள்ளார். எனினும் அவர் பார்ட் டைம் பவுலர் தான். அதனால் நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை அணியில் உள்ளது. 
 
ishant sharma believes his ipl performance make chance as 4th seamer in world cup team
Author
India, First Published Mar 18, 2019, 11:19 AM IST

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்களை உறுதி செய்துவிட்டது. எஞ்சிய 2-3 வீரர்களை மட்டுமே உறுதி செய்ய வேண்டும். 

மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அணி இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுவதற்கு காரணங்களில் ஒன்று, பவுலிங் யூனிட். முன்னெப்போதையும் விட வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக இந்திய பவுலிங் திகழ்கிறது. 

ishant sharma believes his ipl performance make chance as 4th seamer in world cup team

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். ஹர்திக் பாண்டியா நான்காவது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக உள்ளார். எனினும் அவர் பார்ட் டைம் பவுலர் தான். அதனால் நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை அணியில் உள்ளது. 

அந்த வகையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உலக கோப்பைக்கு அழைத்து செல்ல கலீல் அகமது பரிசோதிக்கப்பட்டார். ஆனால் கலீல் அகமதுவின் பவுலிங்கில் வேகம் இல்லை. உமேஷ் யாதவும் ஏமாற்றிவிட்டார். உமேஷ் யாதவ் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவருமே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 

ishant sharma believes his ipl performance make chance as 4th seamer in world cup team

அதனால் இன்னும் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக இதுவரை யாரும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக வீசி உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் இஷாந்த் சர்மா. இந்திய அணியில் 2007ம் இந்திய அணியில் அறிமுகமான இஷாந்த் சர்மா, 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவைல்லை. பும்ரா, புவனேஷ்வர் குமாரின் அபாரமான பவுலிங்கால் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட இஷாந்த் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

ishant sharma believes his ipl performance make chance as 4th seamer in world cup team

கடந்த சீசனில் ஐபிஎல்லிலும் புறக்கணிக்கப்பட்டார் இஷாந்த் சர்மா. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக பந்துவீசியதை அடுத்து, இந்த சீசனில் அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்துள்ளது. ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசி உலக கோப்பை அணியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக இணையும் முனைப்பில் உள்ளார் இஷாந்த் சர்மா. 

ishant sharma believes his ipl performance make chance as 4th seamer in world cup team

இதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, நான் எப்போதுமே நேர்மறையான நபர். அதே மனநிலையில்தான் இப்போதும் உள்ளேன். ஐபிஎல் மூலம் இந்திய அணியில் எனக்கான வாய்ப்பை தேடிக்கொள்ள முடியும் என நம்புகிறேன். இந்திய அணியில் இடம்பிடிக்க, விக்கெட்டுகளை நிறைய வீழ்த்துவதுதான் வழி. ஐபிஎல்லில் நன்றாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக கோப்பை அணியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக இணைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios