இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அடுத்த  3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் அவர் இந்தியா திரும்புகிறார். ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், தற்போது டெஸ்ட் அணியில் ரோஹித் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி ஆடாத போட்டிகளில், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானேவை கேப்டனாக செயல்பட வைக்காமல், ரோஹித் சர்மாவைத்தான் கேப்டனாக்க வேண்டும் எஅ இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், கிரிக்கெட்டைவிட குடும்பம்தான் முக்கியம். எனவே கோலியின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கோலியின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால் கோலி ஆடாத போட்டிகளில் ரஹானேவை கேப்டனாக்காமல் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும். இதில் ரஹானேவுக்கு எதிராக எதுவும் இல்லை. ரோஹித் தன்னை ஒரு கேப்டனாக ஏற்கனவே நிரூபித்துவிட்டதுடன், மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்தவர் என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.