சென்னையின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 6, 4 அடித்து சிஎஸ்கே அணிக்கு ஜடேஜா டைட்டில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
- Home
- Sports
- Sports Cricket
- IPL Final 2023 CSK vs GT Highlights: சென்னைக்கு டைட்டில் வாங்கி கொடுத்த ஜடேஜா!
IPL Final 2023 CSK vs GT Highlights: சென்னைக்கு டைட்டில் வாங்கி கொடுத்த ஜடேஜா!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
5ஆவது முறையாக சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்!
5ஆவது முறையாக சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னையின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 6, 4 அடித்து சிஎஸ்கே அணிக்கு ஜடேஜா டைட்டில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
15 ஓவர்களாக குறைப்பு: சென்னைக்கு 171 ரன்கள் இலக்கு!
மழை குறுக்கீடு காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12.10 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மழை குறுக்கீடு: போட்டி ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பு!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை ஆடிய போது முதல் ஓவரிலேயே மழை குறுக்கீடு இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தற்போது வரையில் மழை பெய்து வருவதால் ஓவர்கள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் நிறைவு விழாவில் ஜொலித்த நரேந்திர மோடி ஸ்டேடியம்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாடகர் கிங் பாலிவுட் பாடல்கள் பாடினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்ததைத் தொடர்ந்து பின்னணி பாடகர் டிவைன் பாலிவுட் பாடல்கள் பாடி அசத்தினார். அப்போது நரேந்திர மோடி ஸ்டேடியம் பிரமாண்டமாக ஜொலித்தது.

இடது கையில் டாஸ் போட்ட தோனி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இடது கையால் டாஸ் போட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டி பார்க்கும் இந்திய வீரர்கள்!
இங்கிலாந்தில் பஸ்ல போய்க்கொண்டே ஐபிஎல் இறுதிப் போட்டி பார்க்கும் இந்திய வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் அங்கே பஸ்ல சென்று கொண்டே ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்க்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெற்றி இலக்கு 215
முதலில் பேட்டிங்க் செய்ய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது.
தோனியின் ஸ்டெம்பிங்கில் சிக்கிய சுப்மன் கில்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து தோனியின் ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார்.
அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள்!
ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் 11 போட்டிகளில் விளையாடி தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 8 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்ட தீபக் சாஹர்!
கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்ட தீபக் சஹார். அப்போது கில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 3 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 24 ரன்கள் எடுத்துள்ளது. விருத்திமான் சகா 20 ரன்களும், சுப்மன் கில் 4 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்ட தீபக் சாஹர்!
கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்ட தீபக் சஹார். அப்போது கில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 3 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 24 ரன்கள் எடுத்துள்ளது. விருத்திமான் சகா 20 ரன்களும், சுப்மன் கில் 4 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார். இது தோனியின் 250 ஆவது ஐபிஎல் போட்டியாகும்.
ஐபிஎல் 2023 நிறைவு விழாவில் பாடகர் கிங்
ஐபிஎல் 2023 நிறைவு விழாவில் பின்னணி பாடகர் கிங் பாலிவுட் பட பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
CSK vs GT Final 2023: மைதானத்திற்கு வெளியில் குவிந்த ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், ரசிகர்கள் மைதானத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

சென்னை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்த சிஎஸ்கே வீரர்களுக்கு வழிநெடுகிலும் சிஎஸ்கே வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இன்று மழைக்கு வாய்ப்பில்லை!
இன்று மழைக்கு வாய்ப்பில்லாத நிலையில் போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று கூறப்படுகிறது.