ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஐபிஎல் 14வது சீசனில் புதிதாக 2 அணிகளை சேர்த்து, பெரிய ஏலமாக நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது. பின்னர், கூடுதல் அணிகளை சேர்க்கும் திட்டத்தை ஓராண்டுக்கு ஒத்திவைத்தது. 2022 ஐபிஎல்லில் தான் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. எனவே 14வது சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாக நடத்தப்படவுள்ளது.

அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏலம் எங்கே நடக்கும் என்ற தகவல் இல்லை.