இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் அவர் இங்கிலாந்துக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை.

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் அவர் இங்கிலாந்துக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை. கேதர் ஜாதவ் மிடில் ஆர்டரின் முக்கியமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேவைப்படும்போது பவுலிங் போட்டு விக்கெட்டையும் வீழ்த்தக்கூடியவர். எனவே ஒருவேளை அவர் ஆடமுடியாமல் போனால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு.

இந்நிலையில், இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அதற்குள் கேதர் ஜாதவ் முழு உடற்தகுதி பெறுவாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை கேதர் உலக கோப்பையில் ஆடமுடியாமல் போனால், அவருக்கு பதிலாக ராயுடு அல்லது அக்ஸர் படேல் அணியில் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ராயுடு பேட்டிங் மட்டும்தான் ஆடுவார். ஆனால் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே கிடைத்த வாய்ப்பில் நன்றாக ஆடியுள்ளார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.