ரூ.5 கோடி கொடுத்த பரிசுத் தொகையை ரூ.2.5 கோடி மட்டும் போது என்று சொன்னவர் ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிற்கு டி20 உலகக் கோப்பை வென்றதற்காக வழங்கப்பட்ட ரூ.5 கோடி பரிசுத் தொகையை தனக்கு ரூ.2.5 கோடி மட்டும் போதும் என்று சொல்லிவிட்டாராம்.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணியினர் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.
கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த 125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியுடன் துணை பணியாளர்கள், ரிசர்வ் பிளேயர்ஸ் என்று மொத்தமாக 42 பேர் அமெரிக்கா சென்றனர். பிசிசிஐ கொடுத்த ரூ.125 கோடி பரிசுத் தொகையானது 42 பேர் கொண்ட இந்திய அணி குழுவுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், பிசியோ என்று ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
போட்டியில் இடம் பெற்று விளையாடிய வீரர்கள், ஒரு போட்டியில் கூட விளையாடாத இந்திய வீரர்களுகள் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடியும், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும், உதவி ஊழியர்களில், 3 பிசியோதெரபிஸ்ட்கள், 3 த்ரோடவுன் நிபுணர்கள், 2 மசாஜ் செய்பவர்கள் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் வழங்கப்படுகிறது.
ஆனால், ராகுல் டிராவிட் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2.5 கோடி மோதும் என்று சொல்லியிருக்கிறாராம். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உட்பட தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு தலைமை பயிற்சியாளர் இந்திய அணிக்கு ஒரு போதும் கிடைக்க வாய்ப்பில்லை. அமைதி, பொறுமை, நிதானம் ஆகியவற்றிற்கு உதாரணமே ராகுல் டிராவிட் என்று சொல்லலாம். டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். மேலும், வரும் 27 ஆம் தேதி இலங்கை செல்லும் இந்திய அணியுடன் இணைந்து கவுதம் காம்பீரும் இலங்கை செல்கிறார். இந்த தொடரிலிருந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.