உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோற்று, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவை எதிர்கொண்டு ஆடுகிறது. 

இந்திய அணியில் தவான் இல்லாததால் ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்குகிறார். காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகியதால் ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் விஜய் சங்கர் ஆடுகிறார். 

சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி:

ரோஹித், ராகுல், கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, பும்ரா. 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், குல்பாதின் நைப்(கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, இக்ரம் அலி கில்(விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஜட்ரான், ரஷீத் கான், அஃப்டாப் ஆலம், முஜீபுர் ரஹ்மான்.