உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இனிமேல் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணியுடன் ஆடிவருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடிய ஷமி தான் இந்த போட்டியிலும் ஆடுகிறார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல் இல்லை. ரசல் காயத்தால் தொடரிலிருந்து விலகிவிட்டார். இந்த போட்டியில் ஃபேபியன் ஆலென் ஆடுகிறார். ரசலுக்கு பதிலாக அணியில் இணைந்த சுனில் ஆம்ப்ரீஷ் இந்த போட்டியில் ஆடுகிறார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஷமி, குல்தீப், சாஹல், பும்ரா. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஷ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரான், ஹெட்மயர், ஹோல்டர்(கேப்டன்), பிராத்வெயிட், ஃபேபியன் ஆலன், கீமார் ரோச், கோட்ரெல், ஒஷேன் தாமஸ்.