Asianet News TamilAsianet News Tamil

ZIM vs IND: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்! நீயே ஓபனிங்கில் இறங்கிக்கப்பா.. விட்டுக்கொடுத்த கேப்டன் கேஎல் ராகுல்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்  கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

india win toss opt to field againsr zimbabwe in first odi
Author
Harare, First Published Aug 18, 2022, 12:51 PM IST

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு தயாராகிவருவதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடுகிறது.

ஹராரேவில் இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

கேஎல் ராகுல் அணியில் இருந்தாலும், ஷிகர் தவானுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் 3ம் வரிசையில் ஆடுகிறார். கேப்டன் கேஎல் ராகுல் 4ம் வரிசையிலும் தீபக் ஹூடா 5ம் வரிசையிலும் ஆடுகிறார்கள். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக ஆடுகிறார்.

ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஆடுகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுகின்றனர்.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணி:

மருமாணி, இன்னசெண்ட் கையா, சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதவெரெ, சிக்கந்தர் ராஜா, ரெஜிஸ் சகாப்வா (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் இவான்ஸ், விக்டர் நியூயாச்சி, ரிச்சர்ட் கராவா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios