Asianet News TamilAsianet News Tamil

India vs New Zealand கடைசி டி20: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

india win toss opt to bat against new zealand in last t20
Author
Kolkata, First Published Nov 21, 2021, 6:50 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

முதல் 2 போட்டிகளிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் டாஸ் வென்றார். முதல் 2 போட்டிகளிலும் சேஸிங் செய்வதற்காக, ஃபீல்டிங்கை தேர்வு செய்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்தமான மைதானம். எப்போதுமே ஈடன் கார்டனில் பெரிய ஸ்கோர் அடித்திருக்கிறார் ரோஹித். ஏற்கனவே டி20 தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் நீக்கப்பட்டு ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் யுஸ்வேந்திர சாஹல், திடீரென டி20 உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்டது பேரதிர்ச்சியாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம்பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒருவழியாக கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சாஹலுக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து அணியில் டிம் சௌதி ஆடாததால், மிட்செல் சாண்ட்னெர் கேப்டன்சி செய்கிறார். சௌதிக்கு பதிலாக லாக்கி ஃபெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios