Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 3வது டெஸ்ட்: டாஸ் ரிப்போர்ட்! இந்த மேட்ச்சிலும் சீனியர் வீரர் ஆடல.. இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

india win toss opt to bat against england in 3rd test
Author
Leeds, First Published Aug 25, 2021, 3:29 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய ஆடுகிறது. இந்த போட்டியிலாவது அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டிக்கான அணியிலும் அஷ்வின் இடம்பெறவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் விலகிய ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட்டுக்கு பதிலாக கிரைக் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் டோமினிக் சிப்ளிக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், க்ரைக் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios