Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND காயத்தால் அடுத்தடுத்து வெளியேறும் வீரர்கள்.. பெரிய பிரச்னையில் இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இன்று ஒரே நாளில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் காயத்தால் விலகியுள்ளனர்.
 

india standby player avesh khan also ruled out of test series against england
Author
England, First Published Jul 22, 2021, 9:07 PM IST

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்தில், முன்னதாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய இந்திய அணி, அந்த போட்டியை முடித்துவிட்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஆடுவதற்காக அங்கேயே தங்கிவிட்டது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. அதற்காக தீவிரமாக தயாராகிவரும் இந்திய அணி, பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 

ஏற்கனவே இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், பயிற்சி போட்டியில் கவுண்ட் அணியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் காயத்தால் விலகியுள்ளனர்.

கால் விரலில் காயம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட் பை வீரராக அணியில் எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளனர்.

சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் பயிற்சி போட்டியில் கவுண்டி அணியில் ஆடிய நிலையில், அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

கில், சுந்தர், ஆவேஷ் கான் என இந்திய அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் விலகுவது இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் நீண்ட தொடரில் இந்திய அணி ஆடுவதால், தொடரின் இடையே சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அணியின் நிலை மோசமாகிவிடும் என்பதால், இலங்கை தொடர் முடிந்த பின்னர், ஒருசில வீரர்களை பிசிசிஐ இங்கிலாந்துக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், ரிதிமான் சஹா.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா
 

Follow Us:
Download App:
  • android
  • ios