Asianet News TamilAsianet News Tamil

அதிரடி மாற்றத்தோடு களமிறங்கும் இந்தியா: டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
 

India have won the toss and choose to bat first in First ODI against New Zealand
Author
First Published Jan 18, 2023, 1:22 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!

இதன் காரணமாக இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

திருமணம் நிச்சயமாயிருச்சு, தேதி தான் குறிக்கல: அக்‌ஷர் படேல் - மேகா திருமணம் எப்போது?

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி.

நியூசிலாந்து அணி: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், ஹென்றி சிப்லே, லக்கி பெர்குசன், பிளைர் டிக்னெர்,

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் 3 வேகப்பந்து வீச்சாளர்களும், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்குகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய கையோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய வெற்றியோடு நியூசிலாந்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களம் காணுகிறது.

முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கே எல் ராகுல் வீடு!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 147 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 703 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதமும், ஒரு சதமும் அடங்கும். ஒரு முறை மட்டும் அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
 

 

இதே போன்று நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி....

ஒரு நாள் போட்டி - 26
நாட் அவுட் - 3
ஒரு நாள் போட்டியில் ரன்கள் - 1378
அதிகபட்சமாக - 154 ரன்கள் நாட் அவுட்
அரைசதம் - 8 முறை
சதம் - 5 முறை
பவுண்டர்கள் - 123
சிக்சர்கள் - 19
ஒரு நாள் போட்டி பேட்டிங் ஆவரேஜ் - 59.91
ஒரு நாள் போட்டியில் ஸ்ட்ரைக் ரேட் - 94.64

Follow Us:
Download App:
  • android
  • ios