Asianet News TamilAsianet News Tamil

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள்..! அருமையான பெயர்கள் சூட்டி மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
 

india cricketer dinesh karthik blessed with twin boy babies
Author
Chennai, First Published Oct 28, 2021, 10:08 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். 2004ம் ஆண்டிலிருந்தே இந்திய அணிக்காக ஆடிவந்தாலும், தோனி இதே காலக்கட்டத்தில் ஆடியதால் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் அவ்வப்போது எடுக்கப்பட்டாரே தவிர, தொடர்ச்சியாக எடுக்கப்படவில்லை. இடையிடையில் கிடைக்கும் வாய்ப்புகளை அவரும் சரியாக  பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் வங்கதேசத்துக்கு எதிராக  கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

அதன் விளைவாக, இந்திய அணி தேர்வாளர்களின் பார்வை தினேஷ் கார்த்திக்கின் மீது பட்டது. 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் எடுக்கப்பட்டார். ஆடும் லெவனிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில்  இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அணியை காப்பாற்ற கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டார் தினேஷ் கார்த்திக். அதன்பின்னர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இனிமேல் இடம் கிடைக்கவும் வாய்ப்பில்லை.

ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக ஆடிவரும் அவர், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளதால் கேகேஆர் அணி அவரை கழட்டி விட்டுவிடும். எனவே அடுத்த சீசனில் இருந்து வேறு அணிக்காக ஆடவோ, அல்லது மீண்டும் கேகேஆர் அணியில் எடுக்கப்படவோ வாய்ப்புள்ளது. இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்திய அணியில் இனிமேல் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த தினேஷ் கார்த்திக், தனது ரூட்டை கமெண்ட்ரி பக்கம் திருப்பியுள்ளார். இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், அந்த டெஸ்ட் தொடரின் போது ஸ்கை ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக செயல்பட்டார். வர்ணனையாளர் அவதாரம் எடுத்த தினேஷ் கார்த்திக், அந்த பணியை செவ்வனே செய்தார். அடுத்ததாக சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடுவதற்காக தயாராகிவருகிறார்.

அவருக்கு கிரிக்கெட் கெரியரில் இந்திய அணியில் ப்ரோமோஷன் கிடைக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தையாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது. ஆம்.. இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் -  தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

தனது குழந்தைகளுடனான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக். 2 குழந்தைகளுக்கும், கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios