பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இமாத் வாசிமின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்த கராச்சி கிங்ஸ் அணி 202 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
கராச்சி கிங்ஸ் அணி:
மேத்யூ வேட், ஆடம் ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), ஷர்ஜீல் கான், டயாப் தாஹிர், ஷோயப் மாலிக், இர்ஃபான் கான், இமாத் வாசிம் (கேப்டன்), ஆமீர் யாமின், முகமது ஆமீர், ஆண்ட்ரூ டை, டப்ரைஸ் ஷம்ஸி.
இந்தூர் பிட்ச் படுமட்டம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், ஹசன் அலி, முபாசிர் கான், ருமான் ரயீஸ்.
முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜீல் கான் (8), ரோஸிங்டன் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, டயாப் தாஹிர் (19), ஷோயப் மாலிக்(12) ஆகியோரும் சொதப்பினர்.
அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டன் இமாத் வாசிம் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்றார். 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். இமாத் வாசிம் கடைசி வரை களத்தில் நின்று பேட்டிங் ஆடினாலும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை. 20 ஓவரில் 201 ரன்களை குவித்த கராச்சி கிங்ஸ் அணி, 202 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் அணிக்கு நிர்ணயித்தது.
