Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: முதலிடத்தில் இந்தியா.. 4ம் இடத்தில் இங்கிலாந்து..!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

icc world test championship points table after england vs india fourth test
Author
Oval, First Published Sep 6, 2021, 10:46 PM IST

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வென்றது. அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தான் முதல் டெஸ்ட் தொடர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகளும் தலா 50% வெற்றி விகிதத்தை பெற்றுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி 54.17 வெற்றி விகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

தலா 50% வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து அணி 29.17% வெற்றி விகிதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios