Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றம்.. அணியில் இணைந்த அதிரடி வீரர்

இந்திய சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அறிவித்துவிட்டது. டு ப்ளெசிஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில் நோர்ட்ஜே, ருடி செகண்ட் மற்றும் செனுரான் முத்துசாமி ஆகிய மூவரும் முதன்முறையாக இடம்பிடித்திருந்தனர். 

henrich klaasen replace rudy second in south africa test team
Author
South Africa, First Published Aug 18, 2019, 3:56 PM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் எஞ்சியுள்ளது. 

அதன்பின்னர் இந்திய அணி நாடு திரும்பியதும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பைக்கு பின்னர் ஆடும் முதல் தொடர் இந்தியாவுக்கு எதிரானதுதான். 

செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அறிவித்துவிட்டது. டு ப்ளெசிஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில் நோர்ட்ஜே, ருடி செகண்ட் மற்றும் செனுரான் முத்துசாமி ஆகிய மூவரும் முதன்முறையாக இடம்பிடித்திருந்தனர். 

henrich klaasen replace rudy second in south africa test team

இந்நிலையில் பயிற்சி போட்டியின் போது ருடி செகண்ட் காயமடைந்ததால், இந்திய சுற்றுப்பயணத்திலிருந்தே விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக க்ளாசன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த ருடி செகண்டுக்கு அந்த சந்தோஷம் நிலைக்காமல் போய்விட்டது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

ஃபாஃப் டு ப்ளெசிஸ்(கேப்டன்), டெம்பா பவுமா(துணை கேப்டன்), டி ப்ருய்ன், குயிண்டன் டி காக், எல்கர், ஹாம்ஸா, கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், முத்துசாமி, இங்கிடி, நோர்ட்ஜே, ஃபிலாண்டர், டேன் பியெட், ரபாடா, க்ளாசன். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios