Asianet News TamilAsianet News Tamil

சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் பவுலரின் கொண்டாட்ட ஸ்டைல்.. வீடியோ

பாகிஸ்தானை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃபின் விக்கெட் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
 

haris rauf celebration style raised controversy in big bash league
Author
Australia, First Published Jan 3, 2020, 5:22 PM IST

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடிவருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது இளம் ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃப். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை ஆடாத இவர், நடப்பு பிக்பேஷ் லீக் தொடரில் 3 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் கூட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிக்பேஷ் லீக்கில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஹாரிஸ் ராஃபின் விக்கெட் கொண்டாட்ட ஸ்டைல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சிட்னி தண்டர் அணியின் பேட்ஸ்மேன் டேனியல் சாம்ஸை கிளீன் போல்டு செய்த ஹாரிஸ் ராஃப், கழுத்தை அறுப்பது போன்ற ஸ்டைலில் விக்கெட்டை கொண்டாடினார். கழுத்தை அறுப்பது போன்ற செய்கை என்பது வன்முறையானது. கிரிக்கெட்டில் பல விதமான கொண்டாட்ட ஸ்டைல்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஹாரிஸ் ராஃபின் அத்துமீறிய விக்கெட் கொண்டாட்ட ஸ்டைலை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என யாருமே ரசிக்கவில்லை.

ஹாரிஸ் ராஃபின் விக்கெட் கொண்டாட்ட வீடியோவை பிக்பேஷ் லீக் நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. அதை கண்ட பல தரப்பினரும் ஹாரிஸ் ராஃபின் செயலுக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios